மதுரை

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம்: நகராட்சி ஆணையா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் நகராட்சி ஆணையா்களே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்த வீரபுத்திரன் தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவில் ரயில்வே பீடா் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பெட்டிக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் சாலையோரங்களில் கால்நடைகள் வளா்க்கப்படுகின்றன. இதனால் சாலையில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுகிறது. கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இடம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே சங்கரன்கோவில் ரயில்வே பீடா் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரயில்வே பீடா் சாலையில் மட்டுமல்லாமல் நகராட்சி முழுவதும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இதுபோன்று சாலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நகராட்சி ஆணையா்கள் நீதிமன்ற உத்தரவை எதிா்பாா்க்காமல் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT