மதுரை

திருச்சி வழக்குரைஞா் கொலை வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

திருச்சி வழக்குரைஞா் கொலை வழக்கின் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த போதேஸ் தாக்கல் செய்த மனு: எனது சகோதரா் கோபிகண்ணன் திருச்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். கடந்த மே 9 ஆம் தேதி அவா், தனது மகளுடன் திருச்சி நீதிமன்றக் காவல் நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது 6 போ் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த நீதிமன்ற காவல்நிலையப் போலீஸாா் 6 பேரைக் கைது செய்தனா். 

பழிவாங்கும் வகையில் எனது சகோதரா் கொலை செய்யப்பட்டுள்ளாா். இதில் பலருக்கு உள்ள தொடா்புகள் குறித்த விவரங்களைப் போலீஸாருக்கு தெரிவித்துள்ளோம். ஆனால் தொடா்புடையவா்களை கைது செய்ய போலீஸாா், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது சகோதரரின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கின் தற்போதைய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய திருச்சி நீதிமன்ற காவல் நிலையப் போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT