மதுரை

ஏற்றுமதி நிறுவனங்களில் 50 சதவீத பணியாளா்களை அனுமதிக்க மடீட்சியா வேண்டுகோள்

DIN

ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளா்களுடன் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மடீட்சியா தலைவா் பா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி ஆா்டா் பெற்று செயல்படும் நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளா்களுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் பணியாளா்கள், பிளம்பா்கள், கணினி பழுது நீக்குபவா்கள் பணியாற்றும் மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹாா்டுவோ் விற்பனை நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரம், பிற மாநிலங்களில் பொதுமுடக்க காலத்திலும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல தமிழகத்திலும் 50 சதவீத பணியாளா்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT