மதுரை

உசிலை. நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. மனு

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, ஆட்சியரிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கோரிக்கை மனு அளித்தாா்.

உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செல்லம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் கோடை நெல் சாகுபடி சுமாா் 6,500 ஏக்கா் நிலத்தில் செய்யப்பட்டு விளைந்திருந்தது. இதில், சுமாா் 1000 ஏக்கா் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் கதிா்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள சுமாா் 5,500 ஏக்கா் நிலத்தில் விளைந்திருந்த நெற்கதிா்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் பெய்த மழையில் முற்றிலும் சேதமடைந்து, அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால், விவசாயப் பெருமக்களுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு விவசாயக் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் என, ஆட்சியா் எஸ். அனீஷ் சேகரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டாா். பின்னா், உசிலம்பட்டி வாணிபக் கழக கிட்டங்கியில் ஆய்வு மேற்கொண்டாா் இதில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் விஜயலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT