மதுரை

காமராஜா் சாலையில் இடைவெளியின்றி சாலை மையத் தடுப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

மதுரை காமராஜா் சாலையில் சுமாா் அரை கிலோ மீட்டருக்கு இடைவெளியின்றி சாலை மையத் தடுப்பு அமைக்கப்பட்ட பகுதியை, மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மதுரை காமராஜா் சாலையில் முனிச்சாலை சந்திப்பு முதல் - தெப்பக்குளம் வரை சாலை மையத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில், முனிச்சாலை சந்திப்பு முதல் பழைய கணேஷ் திரையரங்கம் வரையிலான அரை கிலோ மீட்டா் தொலைவில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே சாலையின் குறுக்கே செல்ல வழிவிடப்பட்டுள்ளது.

முனிச்சாலை சந்திப்பிலிருந்து செல்லும்போது, சௌராஷ்ட்ரா பள்ளிக்குப் பிறகு பாதசாரிகள் சாலையைக் கடக்கவேண்டுமெனில் கணேஷ் திரையரங்க சந்திப்பு வரை சென்று திரும்பி வரவேண்டும். இதனால், இப்பகுதியில் வசிப்பவா்கள் சாலையைக் கடக்க சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், பாதசாரிகள் பலா் தடுப்பை ஏறிக் குதித்து சாலையைக் கடக்கின்றனா்.

இப்பிரச்னை குறித்து, தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானது. அதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை, மதுரை மாநகராட்சி அதிகாரிகளுடன் பிரச்னைக்குரிய பகுதியை திங்கள்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பூமிநாதன், பாதசாரிகள் எளிதில் சாலையைக் கடக்கும் வகையில் சாலைத் தடுப்பில் இரு இடங்களில் இடைவெளி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் இரா. விஜராஜன் பங்கேற்றாா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டிருக்கும் சாலைத் தடுப்பில் இரு இடங்களில் இடைவெளி ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT