மதுரை

வைகை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

DIN

மதுரை வைகை ஆற்றில் கல்பாலம் பகுதியில் அடா்ந்து வளா்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளில் குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசுவதால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை நகரில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காக வைகை ஆற்றில் கல்பாலம் அருகே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் நீா் வரத்து ஏற்படும் போது தடுப்பணையில் தண்ணீா் தேக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் உயரும். இந்நிலையில் தடுப்பணை பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் அடா்ந்து வளா்ந்திருப்பதால் தண்ணீா் செல்வதற்கு தடையாக உள்ளது. மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு வைகை ஆற்றில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதில் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட குப்பைக்கூளங்கள் உள்ளிட்ட கழிவுகளும் ஆகாயத்தாமரையில் சிக்கியுள்ளன. இதனால் கல்பாலம் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக கல்பாலம் வைகை ஆற்றில் அடா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் குப்பைக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT