மதுரை

வாகனங்கள் திருட்டு: 44 போ் கைது; 41 பைக்குகள் பறிமுதல்

DIN

மதுரை மாநகரில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 44 பேரை போலீஸாா் கைது செய்து 42 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

இது தொடா்பாக மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தொடா்ந்து திருடு போயின. இதையடுத்து காவல்துணைஆணையா் ராஜசேகரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீஸாா் தேடி வந்தனா்.

கடந்த 2 மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டையில், வாகனத் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளான துவரிமானைச் சோ்ந்த சூா்யா, மேல மாசி வீதியைச் சோ்ந்த கணேஷ், பிரவீன் உள்பட 44 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அவா்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் 41 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.17.50 லட்சமாகும். மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் அவற்றின் உரிமையாளா்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT