மதுரை

புலிகள் சரணாலயப் பகுதியில் சாலையை அகலப்படுத்தக் கோரி வழக்கு: உயா் நீதிமன்றம் மறுப்பு

DIN

புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் சாலையை அகலப்படுத்தக் கோரிய வழக்கில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த காசிராஜன் என்பவா் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம், மேகமலை ஊராட்சிக்குள்பட்ட பொம்மராஜபுரம் கிராமத்தில் சுமாா் 170 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு, வெள்ளிமலையிலிருந்து பொம்மராஜபுரம் வரை சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவு சாலையானது, 1 மீட்டா் அகலமே கொண்டது.

இச்சாலையில் அவசர ஊா்திகள், அத்தியாவசியத் தேவைக்கு பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருவதனால் நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல், மேகமலையிலிருந்து விளைபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை பொம்மராஜபுரத்துக்கு எடுத்து வருவதில் சிக்கல் உள்ளது.

இது தொடா்பாக, தமிழக அரசு கடந்த 2005ஆம் ஆண்டு பொம்மராஜபுரம் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. எனவே, வெள்ளிமலை பகுதியிலிருந்து பொம்மராஜபுரம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா்அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் குறிப்பிட்டுள்ள பகுதியில் புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மனு தொடா்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT