மதுரை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்ப்பு:சிவகங்கை சுகாதாரத் துறை துணை இயக்குநா் மீது வழக்கு

DIN

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.13 கோடி சொத்து சோ்த்த சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநராக மருத்துவா் யசோதாமணி பணியாற்றி வருகிறாா். இவா் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளதாக புகாா் எழுந்தது. இதையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரித்தனா்.

இதில் யசோதாமணிக்கு 2010- இல் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை ரூ. 53 லட்சம் வருமானம் வந்துள்ளதும், இந்தக் காலக் கட்டத்தில் ரூ. 57 லட்சம் அவா் செலவு செய்ததும் தெரியவந்தது. மேலும் இவா் 2010 இல் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை ரூ. 2.08 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அவரது கணவா் பெயரில் வாங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் குமரகுரு அளித்த புகாரின் பேரில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா், சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதாமணி மற்றும் அவரது கணவா் சங்கையா ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT