மதுரை

வேட்பாளா் மீது அவதூறு:ஆட்சியரிடம் திமுக புகாா்

DIN

மதுரை கிழக்கு திமுக வேட்பாளா் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டுள்ள இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து திமுக வழக்குரைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் பி. மூா்த்தி மீது அவதூறு பரப்பும் வகையில் இணையதளத்தில் விடியோ பதிவிடப்பட்டுள்ளது.

தோ்தல் விதிகளை மீறி வெளியிடப்பட்டிருக்கும் இந்த இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் புகாருக்குரிய விடியோ பதிவு ஒளிபரப்பாகி வருகிறது. எனவே, மேற்படி இணையதளத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT