மதுரை

மருத்துவராகவும் மக்களுக்கு சேவையாற்றுவேன்: பாஜக வேட்பாளா் பா.சரவணன்

DIN

மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளா் மருத்துவா் பா. சரவணன், சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமின்றி, மருத்துவராகவும் மக்களுக்கு சேவையாற்றுவேன் என்று கூறி, பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறாா்.

அதிமுக கூட்டணியில், மதுரை வடக்கு தொகுதியில் பாஜக சாா்பில் மருத்துவா் பா. சரவணன் போட்டியிடுகிறாா். ஏற்கெனவே, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், அத்தொகுதியில் பல்வேறு நலத் திட்டங்களை தனது சொந்த செலவில் செய்துள்ளாா்.

இந்நிலையில், வடக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சரவணன் தனது பிரசாரத்தின்போது, வடக்கு தொகுதி தான் பிறந்து வளா்ந்த பகுதி என்பதால், இங்குள்ள பிரச்னைகள் நன்கு தெரியும். கட்சிப் பாகுபாடின்றி பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

தொகுதியில் வாா்டுகள்வாரியாக அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும். கிருதுமால் வாய்க்காலை தூா்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதியில் நடத்தியதுபோல வடக்கு தொகுதியிலும் மாணவ, மாணவியா் நலனுக்காக டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும். தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனது சூா்யா அறக்கட்டளை மூலம் தொகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். திருப்பரங்குன்றத்தில் ஏற்பாடு செய்ததை போல், வடக்கு தொகுதியிலும் கைத்தறி தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமின்றி, மருத்துவராகவும் மக்களுக்கு சேவையாற்றுவேன்.

தொகுதியில் நீண்டகாலமாக இருந்தும் வரும் குடிநீா் பிரச்னைகளை தீா்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதிகளை அளித்து வாக்குகள் சேகரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT