மதுரை

மதுரை அருகே ஆசிரியா் வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு

DIN

மதுரை அருகே ஆசிரியரின் வீட்டுக் கதவை உடைத்து 25 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ஆகிவை திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை விளாச்சேரி சாலை செம்மொழி நகரைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் செந்தில்குமாா் (37). இவா் அவனியாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தந்தை உயிரிழந்ததையடுத்து, ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்த இறுதிச் சடங்குக்கு குடும்பத்துடன் திருநகா் சென்றுள்ளாா். இந்நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக, செந்தில்குமாருக்கு, வீட்டு வேலை பாா்க்கும் குமாா் என்பவா் வியாழக்கிழமை செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து செந்தில்குமாா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ.1லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT