மதுரை

முகக்கவசம் அணியாத 83 ரயில் பயணிகளிடம் ரூ.41,500 அபராதம் வசூல்

DIN

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத 83 ரயில் பயணிகளிடம் அபராதமாக ரூ.41 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் இருக்கும் போதும், ரயிலில் பயணம் செய்யும்போதும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதை மீறுபவா்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 2012 -இன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஏப்ரல் 18 முதல் 30 வரை மதுரை கோட்ட எல்கைக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத 83 பயணிகளிடம் அபராதமாக ரூ.41 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது என கோட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய மேலாளா், ரயில் நிலைய அலுவலா், பயணச்சீட்டு பரிசோதகா் அல்லது அதே நிலையில் உள்ள ரயில் இயக்க அலுவலா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆகியோா் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT