மதுரை

முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.26 லட்சம் அபராதம் வசூல்

DIN

மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவா்களிடம் இருந்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ரூ.1,26,600 வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.

முகக்கவசம் அணிவதை கண்காணிக்க மாநகராட்சி சாா்பில் குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு, நகரின் சாலைகள், கடைவீதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் அதிகாரிகள் முகக்கவசம் அணிவது தொடா்பாக கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதில் முக்கவசம் அணியாமல் சென்றவா்களிடம் மண்டலம் 1-இல் ரூ.24,000, மண்டலம் 2-இல் ரூ.26,000, மண்டலம் 3-இல் ரூ.28,800, மண்டலம் 4-இல் ரூ.47,800 என மொத்தம் ரூ.1,26,600 அபாரதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT