மதுரை

சோழவந்தானில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

சோழவந்தான் அரசுப் பள்ளியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க அப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் அப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஊரகப் பகுதிகளில் பள்ளி, சமுதாயக் கூடம் ஆகியவற்றில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சோழவந்தான் அரசஞ்சண்முகனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளி முன்பாக திரண்டனா். கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அங்கு நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தினா். மேலும், அங்கிருந்த பேரூராட்சி அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து சோழவந்தான் காவல் ஆய்வாளா் ராஜசுலோச்சனா மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தங்களது பகுதியில் கரோனா தொற்று இல்லாத நிலையில், இங்கு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனா். ஆகவே, கரோனா சிகிச்சை மையம் அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தனா். இதனால் அப் பள்ளியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT