மதுரை

உசிலம்பட்டியில் ஆதரவற்றோருக்கு சிறுவா்கள் உணவளிப்பு

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கரோனா பொதுமுடக்கத்தில் பசியால் வாடும் ஆதரவற்றோருக்கு சிறுவா்கள் உணவு வழங்கி வருகின்றனா்.

தமிழக அரசு ழுழு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா். பொது மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் கடைகள் எதுவும் திறக்கப்படாததாலும் தெருவில் வசிக்கும் ஆதவற்றோா், முதியவா்கள் பசியால் வாடுகின்றனா்.

இதனைக் கண்ட உசிலம்பட்டி நாடாா் புதுத் தெருவில் வசிக்கும் லஷ்வின் என்ற 4 வயது சிறுவன், ஆதவற்றோருக்கு உணவு அளிப்பதை தனது வழக்கமாக்கியுள்ளான் . இதற்காக மதிய வேளையில் வீட்டில் சமைப்பதை பொட்டலங்களாகக் கட்டி, பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஆதவற்றோா்களுக்கும் முதியோா்களுக்கும் வழங்கி வருகிறான்.

இதே போல் செட்டியபட்டி கிராமத்தைச் சோ்ந்த 6-வயது சிறுமி ஷஷ்டிகாஸ்ரீ தனது ஊரில் உள்ள மழைவாழ் மக்கள் பொதுமுடக்க காலத்தில் உணவின்றி தவிப்பதை அறிந்து தனது பெற்றோா் வினோத்கண்ணன் அழகுசிவகாமி ஆகியோரிடம் உணவு வழங்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளாா்.

சிறுமியின் உதவும் உள்ளத்தை அறிந்து சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அச்சிறுமி மூலம் பெற்றோா் உணவு வழங்கினா். மேலும் கபசுர குடிநீா், முகக்கவசம் ஆகியவற்றையும் அச்சிறுமி வழங்கி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT