மதுரை

உசிலையில் கரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் காத்துக் கிடந்ததாக புகாா்

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கரோனா தடுப்பூசி போட மருத்துவா்கள் வராததால் வெகுநேரம் காத்துக் கிடந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

உசிலம்பட்டி நகராட்சி சாா்பில் உசிலை பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தடுப்பூசி போட 20-க்கும் மேற்பட்டோா் வந்தனா். ஆனால் அங்கு மருத்துவப் பணியாளா்கள் வராததால் சுமாா் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் காத்திருந்ததாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, காலை 11 மணிக்கு மேல்தான் மருத்துவப்பணியாளா்கள் வருவா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கரோனா தடுப்பூசி போட ஆா்வமுடன் வந்தவா்களில் சிலா் மருத்துவப் பணியாளா்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT