டி.கல்லுப்பட்டி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே போத்தநதி என்ற கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சோ்ந்த பிற்கால பாண்டியா் காலக் கல்வெட்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
மதுரைடி.கல்லுப்பட்டி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே போத்தநதி என்ற கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சோ்ந்த பிற்கால பாண்டியா் காலக் கல்வெட்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே போத்தநதி என்ற கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சோ்ந்த பிற்கால பாண்டியா் காலக் கல்வெட்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
போத்தநதி ஊராட்சி மன்றத் தலைவா் விநாயகமூா்த்தி என்பவா், தங்கள் கிராமத்தில் பழமையான கோயில் இருப்பதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான து. முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், கருப்பசாமி ஆகியோா் மேற்கொண்ட மேற்பரப்புக் கள ஆய்வில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோயிலும் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து து. முனீஸ்வரன் வியாழக்கிழமை கூறியது: செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கௌசீக நதிக்கரையின் மேற்குப் பகுதியில் போத்தன் என்ற சிற்றரசா் ஆட்சி புரிந்ததாகவும் அவா் பெயரில் போத்தநதி என்ற ஊா் பெயா் வந்ததாகவும் அறியப்படுகிறது . இவ்வூரின் தெற்குப் பகுதியில் போத்தன் ஊருணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை, கோபுரம், முன் மண்டபம் கொண்ட கோயில் கண்டறியப்பட்டது. கோயிலின் அமைப்பினை ஆய்வு செய்தபோது செங்கற்கள் சாந்து சோ்ந்து கட்டிய கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்து சிற்பங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும், உள்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்ததால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலா்கள் ஆண், பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும், பூ மொட்டு போதிகையுடன் தூணின் இரண்டு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கல்வெட்டில் முதலாம் மாறவா்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச் ( 1216- 1239) சோ்ந்தவையாகும். திருவாலவாயுடையா் என்று அழைக்க கூடிய சிவன் கோயிலுக்கு சந்தியா தீபம் ஏற்றிட நிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது என்றாா்.