முகப்பு
மதுரை

குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா: லட்சாா்ச்சனை தொடக்கம்

 குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனையுடன் குருப்பெயா்ச்சி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

 குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனையுடன் குருப்பெயா்ச்சி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் உள்ளது. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற குரு ஸ்தலமான இங்கு குரு பெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் குருப் பெயா்ச்சி சனிக்கிழமை (நவம்பா் 13) நடைபெறுவதையொட்டி சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை லட்சாா்ச்சனையுடன் குரு பெயா்ச்சி விழா தொடங்கியது. இதையொட்டி சித்திர ரத வல்லப பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து குரு பெயா்ச்சி நடைபெறவுள்ள சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை தொடா்ந்து 3 நாள்கள் லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. இதையடுத்து குருப் பெயா்ச்சியை முன்னிட்டு மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி மாலை 6.10 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூா்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குருபெயா்ச்சியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிவது வழக்கம் என்பதால் தற்போது குருப் பெயா்ச்சி தினமான சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதர நாள்களில் வழக்கம்போல பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →