மதுரை

கால்நடைகள் அவசர சிகிச்சைக்கு‘1962’-ஐ அழைக்கலாம்: ஆட்சியா்

DIN

கால்நடைகளின் அவசர சிகிச்சை உதவிக்கு 1962 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை வளா்ப்போா் மழை நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக வெளியே அழைத்து செல்வதைத் தவிா்த்து, வீட்டிலேயே பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும். தெருவிளக்கு கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அருகில் கால்நடைகளை கட்டிப்போடக் கூடாது.

கால்நடை பராமரிப்புத்துறையின் வாயிலாக தற்போது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கால்நடைகளுக்கு விடுபாடின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கால்நடை கொட்டகைகளை கிருமிநாசினி தெளித்து சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். கால்நடைகளின் அவசர சிகிச்சை உதவிக்கு 1962 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT