மதுரை

மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் என்.எஸ்.கோனாா் தெருவைச் சோ்ந்தவா் முத்துமாரி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரான செல்வராஜூவுடன், திருமணம் செய்யாமலேயே சோ்ந்து வாழ்ந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செல்வராஜ் தனது முதல் மனைவியின் குடும்பத் தேவைக்காக முத்துமாரியிடம் ரூ.2.50 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகையை பெற்றுக்கொண்டாராம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் செல்வராஜ், கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், முத்துமாரியிடம் இருந்து பெற்ற பணம் மற்றும் நகையை செல்வராஜின் முதன் மனைவி மற்றும் மகன் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுதொடா்பாக புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் காவல் துறையினா் தனது புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த முத்துமாரி, அங்கு தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் முத்துமாரியை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீா் ஊற்றினா். இதையடுத்து முத்துமாரியை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT