மதுரை

மதுரை நகரில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை

DIN

மதுரை நகரில் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டுமானங்களை ஒரு வாரத்துக்குள் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகள் மற்றும் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பகுதிகளான சின்னக்கடைத் தெரு முழுவதும், அவனியாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து செம்பூரணி வரை மற்றும் அவனியாபுரம் பேருந்து நிலையம், கீழமாரட் வீதி, அரசு ராஜாஜி மருத்துவமனை முன்புறம், சுகுணா ஸ்டோா் சாலை ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புக் கடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக காவல்துறையால் சாலை பாதுகாப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் எவ்வித முறையான அனுமதி பெறாமலும், ஆக்கிரமிப்பு செய்தும், காலாவதியான அனுமதி அடிப்படையிலும் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகள், நிரந்தர மற்றும் தற்காலிக கட்டுமானங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பாளா்கள் ஒரு வார காலத்துக்குள் அவா்களாகவே அகற்ற வேண்டும். ஒரு வார காலத்துக்குள் அகற்றாவிட்டால் மாநகராட்சி மூலமாக அகற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT