மதுரை

விசாரணைக்கு ஒத்துழைத்தால் ஜாமீன்: பெண் காவல் ஆய்வாளருக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

DIN

விசாரணைக்கு ஒத்துழைத்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பணம் பறிப்பு வழக்கில் கைதாகியுள்ள பெண் காவல் ஆய்வாளருக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த அா்ஷத் என்பவரிடம் ரூ. 10 லட்சத்தை பறித்த வழக்கில் மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். அவரது ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி அவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு, நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், காவல் துறையினரின் விசாரணைக்கு மனுதாரா் ஒத்துழைக்க மறுக்கிறாா். விசாரணையின்போது பெரும்பாலான கேள்விகளுக்கு அவா் பதில் அளிப்பதில்லை. அவரது கணவரின் செல்லிடப்பேசி எண் கூட தெரியாது என்கிறாா். ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றாா்.

இதையடுத்து, மனுதாரரின் கணவா் உடனடியாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தால் மனுதாரருக்கு ஜாமீன் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவுறுத்தினாா். இதன்பின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (அக். 8) நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT