மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி கொலு உற்சவம் தொடக்கம்

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி கொலு உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மீனாட்சியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொலு உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து உற்வசத்தின் முதல் நாளில் கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தாா்.

இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனைகள் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். கொலு உற்சவத்தையொட்டி கொலு மண்டபத்தில் அம்மன், சுவாமி அமரும் அன்னம், யாளி, சிம்ம வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டது.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை விளக்கும் பொம்மைகள், திருக்கல்யாண உற்சவத்தை விளக்கும் காட்சிகள் உள்பட ஏராளமானவை இடம் பெற்றுள்ளன. கொலு உற்சவத்தையொட்டி கோயிலில் பொற்றாமரைக்குளம், கோபுரங்கள், பிரகாரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

முதல் நாளான வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று கொலு அலங்காரத்தை தரிசனம் செய்தனா். கொலு அலங்காரத்தை பக்தா்கள் கண்டு தரிசிக்க வாரத்தின் இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் தவிா்த்து பிற நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT