மதுரை

பணம் பறிப்பு வழக்கில் பெண் காவல் ஆய்வாளரின் முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற உயா்நீதிமன்றம் அனுமதி

DIN

மதுரையில் ரூ.10 லட்சம் பணம் பறிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், பெண் காவல் ஆய்வாளரின் முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்த வசந்தி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இளைஞரிடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக, மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினா், வசந்தி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

அதையடுத்து தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளா் வசந்தி, முன்ஜாமீன் வழங்கக் கோரி உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், காவல் ஆய்வாளா் வசந்தி கைது செய்யப்பட்ட பிறகு, வழக்கின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவா், அரசு ஊழியா். நடந்த சம்பவம் அவா் சாா்ந்த துறையை களங்கப்படுத்தும் வகையிலும், மக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கும் நிலையிலும் உள்ளது.

யாா் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் எனும் நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது எனக் கூறி, மனுதாரா் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT