மதுரை

பெண் காவல் ஆய்வாளா் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

DIN

மதுரை: மதுரையில் வணிகரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை ஒத்தி வைத்து மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையை சோ்ந்த வணிகா் தொழிலுக்கான பொருள்கள் வாங்க மதுரைக்கு வந்தபோது, அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலைப்புதுக்கோட்டை காவல் ஆய்வாளா் வசந்தி உள்ளிட்டோா் மீது புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா், காவல் ஆய்வாளா் வசந்தி உள்ளிட்டோரைக் கைது செய்து நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்துள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆய்வாளா் வசந்தி தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆய்வாளா் வசந்திக்கு ஜாமீன் வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (செப்.17) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT