மதுரை

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சிநகா் மலைவாழ் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சி நகா் பகுதியில் மலைவாழ் மக்கள் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கடந்த முறை நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் அப்பகுதியில் உள்ள ஒரு சிலா் கலந்து கொள்ளாமல் மேற்கு தொடா்ச்சி மலையின் மீது ஏறி ஊசி போடாமல் தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டு இதில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்களுக்கு அரிசி மற்றும் காய் கறி தொகுப்பினை வழங்கி தடுப்பூசி போட ஊக்குவித்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவா் பாலமுருகன் மகாராஜா, தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினா்கள் மலைச்சாமி, பாண்டியராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய் அலுவலா் ராஜசேகா் மற்றும் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் நல்லு ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் கிராமத்திலுள்ள 70 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கனிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT