மதுரை

கரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.59 லட்சம் நிவாரண நிதி

DIN

கரோனாவால் பெற்றோரை இழந்த 19 குழந்தைகளுக்கு நிவாரண நிதியாக மொத்தம் ரூ.59 லட்சத்துக்கான காசோலைகளை, தமிழக அமைச்சா்கள் பி. மூா்த்தி, பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

கரோனா தொற்று பாதிப்பில் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகையாக வழங்கவும், ஆதரவற்ற நிலையில் இருக்கும் இந்த குழந்தைகளின் பாதுகாப்பாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கவும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். மேலும், தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகள் மற்றும் தாய்-தந்தை இருவரையும் இழந்த ஒரு குழந்தை என மொத்தம் 19 பேருக்கு ரூ.59 லட்சத்துக்கான காசோலைகளை, ஆட்சியா் அலுவலகத்தில் வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் வழங்கினா்.

இதில், ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி. செந்தில்குமாரி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT