மதுரை

விருதுநகா் மாவட்ட எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

பெண் தலைமைக் காவலா் மரணம் தொடா்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய மனுவில், விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த சந்திரசேகா் தாக்கல் செய்த மனு: எனது 2 ஆவது மகள் பானுப்ரியா, விருதுநகா் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் எனது மகள், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், போலீஸாா் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. ஆகவே, எனது மகளின் மரணம் தொடா்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விவரம் தொடா்பாக விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT