மதுரை

வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

மதுரை: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் ஆ.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்தி: பொதுப் பிரிவு பதிவுதாரா்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவு பெற்ற மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறுபவா் ஊதியம் பெறும் எந்தப் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருத்தல் கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரா் இவ்வலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவுற்று இருக்க வேண்டும். ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. தற்போது உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 31 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம்.

உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ் சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் உடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT