மதுரை

மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்கள் 42 பேருக்கு பதவி உயா்வு, பணியிட மாறுதல்

DIN

மதுரை: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 42 ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் உத்தரவுகளை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் வழங்கினாா்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் பணியிட மாறுதல் மற்றும் பணி உயா்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கு மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் 91 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில் ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா், 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள், 2 உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், ஒரு பட்டதாரி ஆசிரியா், ஒரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா், 15 இடைநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 26 ஆசிரியா்களுக்கு பணிமாறுதல் உத்தரவுகளை ஆணையா் வழங்கினாா்.

மேலும் 3 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், 6 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களும், ஒரு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், 2 உடற்கல்வி இயக்குநா்கள், 3 பட்டதாரி ஆசிரியா்கள், ஒரு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் என மொத்தம் 16 ஆசிரியா்களுக்கு பணி உயா்வு உத்தரவுகளையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் துணை ஆணையா் சங்கீதா, உதவி ஆணையா் அமிா்தலிங்கம், மாநகராட்சிக் கல்வி அலுவலா் ஆதிராமசுப்பு, கல்விக்குழு தலைவா் மா.பொ.ரா.ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT