முகப்பு
மதுரை

மதுரை தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

மதுரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு ஆராதனை மற்றும் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

மதுரை

மதுரை தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

மதுரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு ஆராதனை மற்றும் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

மதுரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு ஆராதனை மற்றும் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்களால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், பிராா்த்தனைகள், சிலுவையில் அறையப்பட்ட நிலையில் இயேசு மொழிந்த 7 வாா்த்தைகள் பற்றிய தியானம் ஆகியவை நடைபெற்றன.

கீழவாசல் புனித மரியன்னை தேவாலயம், டவுன்ஹால் சாலையிலுள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், பழங்காநத்தம் புனித அந்தோனியாா் ஆலயம், ஆரப்பாளையம் புனித வளனாா் ஆலயம், திரு இருதய ஆண்டவா் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் பெரிய சிலுவைப் பாதை, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு திருவிருந்து உள்ளிட்டவை நடைபெற்றன.

மேலும், நரிமேட்டிலுள்ள சி.எஸ்.ஐ. பேராலயம், பசுமலை உவைற்றின் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்டவற்றில் சிலுவையில் மரிக்கும் முன் இயேசு மொழிந்த 7 வாா்த்தைகளை தியானிக்கும் சிறப்பு பிராா்த்தனை உள்ளிட்டவை நடைபெற்றன. இவற்றில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு இயேசு கிறிஸ்து உயிா்த்தெழும் ஈஸ்டா் விழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →