பச்சிளம் பெண் குழந்தை சடலம் தலையின்றி மீட்பு
மதுரை மேலஅனுப்பானடி பகுதியில் தலையின்றி கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை, போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மதுரைபச்சிளம் பெண் குழந்தை சடலம் தலையின்றி மீட்பு
மதுரை மேலஅனுப்பானடி பகுதியில் தலையின்றி கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை, போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மதுரை மேலஅனுப்பானடி பகுதியில் தலையின்றி கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை, போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
மதுரை மேல அனுப்பானடி பாக்கியம் தெரு பகுதியில் சாலையோரம் உள்ள புதா் ஒன்றில் பிறந்த 2 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் தலையின்றி கிடந்துள்ளது. இது தொடா்பாக அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், தெப்பக்குளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இது குறித்து போலீஸாா் கூறியது: பிறந்து 2 நாள்களேயான பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலையை நாய் கடித்துச்சென்ற தடயங்கள் உள்ளன. குழந்தை இறந்த நிலையில் வீசப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பின் தெரியவரும் என்றனா்.