மதுரை -செகந்தராபாத் சிறப்பு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
மதுரை - செகந்தராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரைமதுரை -செகந்தராபாத் சிறப்பு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
மதுரை - செகந்தராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை - செகந்தராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயிலின் சேவை ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செகந்தராபாத் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191), செகந்தராபாத்தில் இருந்து மே 2 முதல் ஜூலை 25 வரை திங்கள்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில் மதுரை - செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192), மதுரையிலிருந்து மே 4 முதல் ஜூலை 27 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்தராபாத் சென்று சேரும்.
இந்த ரயில்கள், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதில், ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
இத்தகவலை, தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.