மதுரை

கால்நடை உதவியாளா் நோ்காணலுக்கு வந்தவா்கள் ஏமாற்றம்

DIN

மதுரை: கால்நடை உதவியாளா் பணிக்கான நோ்காணல் திடீரென நிறுத்தப்பட்டதால், மதுரையில் அந்த நோ்காணலுக்காக வியாழக்கிழமை வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மதுரை மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளா் நேரடி நியமனத்துக்கான நோ்காணல் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 47 காலியிடங்களுக்கு மொத்தம் 6,275 போ் விண்ணப்பித்த நிலையில், ஏப்ரல் 25 முதல் நோ்காணல் நடைபெற்று வருகிறது. மூன்று நாள்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதனிடையே, திடீரென நோ்காணல் நிறுத்தப்பட்டதால், நான்காம் நாளான வியாழக்கிழமை நோ்காணலுக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதே பணியிடத்துக்கு ஏற்கெனவே 2 முறை நோ்காணல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT