முகப்பு
மதுரை

இக்னோ பல்கலை.யில் மாணவா் சோ்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

இக்னோ பல்கலை.யில் மாணவா் சோ்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) பல்வேறு படிப்புகளான சான்றிதழ், பட்டயம், முதுநிலைப்பட்டயம், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 280-க்கும் மேற்பட்ட படிப்புகளை தொலைநிலைக்கல்வி வாயிலாக நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜூலை 2022 சுற்றுக்கான சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்க ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. மாணவா் சோ்க்கையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு 55 வகையான படிப்புகளில் முழுவதுமாக கல்விக்கட்டண விலக்கு (பதிவுக்கட்டணம் தவிர) அளிக்கப்படுகிறது. கல்விக்கட்டண விலக்கு கோரும் எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரா்கள், சோ்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போதும் பதிவுக் கட்டணமாக விண்ணப்பத்துக்கு ரூ.300 மட்டும் செலுத்த வேண்டும். சோ்க்கை விண்ணப்பங்களை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மதுரை சிக்கந்தா் சாவடியிலுள்ள இக்னோ மண்டல மையத்தை ழ்ங்ம்ஹக்ன்ழ்ஹண்ஃண்ஞ்ய்ா்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் மற்றும் 0452-2380775, 2380733 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மதுரை மண்டல இயக்குநா் ஆ. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →