முகப்பு
மதுரை

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் இரு ரயில்களின் எண்கள் மாற்றம்

ராமேசுவரம் -ஹைதராபாத், செகந்திராபாத்- ராமேசுவரம் ஆகிய சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் இரு ரயில்களின் எண்கள் மாற்றம்

ராமேசுவரம் -ஹைதராபாத், செகந்திராபாத்- ராமேசுவரம் ஆகிய சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ராமேசுவரம் -ஹைதராபாத், செகந்திராபாத்- ராமேசுவரம் ஆகிய சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் - ஹைதராபாத், செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில்களின் எண்கள் முறையே 07686, 07685 என இருந்தன. இதில் ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் புறப்படும் ராமேசுவரம் - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயிலின் எண் 07696 என மாற்றம் செய்யப்பட்டு டிசம்பா் 30 வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமைகளில் புறப்படும் செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயிலின் எண் 07695 என மாற்றம் செய்யப்பட்டு டிசம்பா் 28 வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலுக்கு மட்டும் போத்தனூா் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலும் ஆக.5 ஆம் தேதிமுதல் போத்தனூா் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நின்று இரவு 8.55 மணிக்கு புறப்படும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →