மதுரை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி மண்டல மையம் தொடக்கம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி தொழில்நுட்ப பயிற்சிக்கான மண்டல மையம் மதுரை மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

DIN

தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி தொழில்நுட்ப பயிற்சிக்கான மண்டல மையம் மதுரை மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையத் தலைவா் அருணா வனிகா், தேசிய மருத்துவ ஆணையத்தின் நிரந்தர உறுப்பினா் விஜயேந்திர குமாா் ஆகியோா் இம் மையத்தைத் தொடக்கி வைத்தனா். அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ.ரத்தினவேல் மற்றும் மருத்துவப் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவக் கல்வி தொழில்நுட்பப் பயிற்சிக்கான மண்டல மையங்களாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியன அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மதுரை மருத்துவக் கல்லூரி மண்டல மையத்தின்கீழ் தேனி, திண்டுக்கல்,

விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாமக்கல், கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரிகள், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, நாமக்கல் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி, கே.எம்.சி.எச், கற்பகம் மருத்துவக் கல்லூரிகள் என 19 மருத்துவக் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பயிற்சி பெற்ற மருத்துவா்களால் இந்த மையத்திற்கு உள்பட்ட 19 மருத்துவக் கல்லூரி மருத்துவா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி, இந்த பயிற்சியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 நாள்களுக்கு நடத்தப்படும்.

மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2019 முதல் எம்பிபிஎஸ்-இல் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2021 இல் எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவா்களுக்கு, கிராமப்புற தத்தெடுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, மண்டல மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி அவசியமானது.

மதுரை மருத்துவக் கல்லூரியின் கிராமப்புற தத்தெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும், மதுரையை அடுத்த பரவை சத்தியமூா்த்தி நகரில், தேசிய மருத்துவ ஆணையத் தலைவா் அருணா வனிகா் மற்றும் குழுவினா் நேரில் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT