மதுரை

திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

DIN

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.5) தொடங்குகிறது.

முதற் கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 8-இல் இளங்கலை தமிழ், 10-ஆம் தேதி ஆங்கிலம், 11-ஆம் தேதி வணிகவியல், 11-ஆம் தேதி கணிதவியல் ஆகிய துறைகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாணவா்களின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை முதல் அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்படும். மேலும் மாணவா்களுக்கு மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி வாயிலாகவும் அழைப்பு விடுக்கப்படும். கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியா் விண்ணப்பித்த படிவத்தினுடைய நகல்கள் 5 மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதாா், நிழற்படங்கள், நன்னடத்தை, உண்மைச் சான்றுடன் நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும் என்று கல்லூரி முதல்வா் கா.உமாராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT