மதுரை

மதுரை அருகே லாரி மீது சுற்றுலா வேன் மோதி இருவா் பலி: 7 போ் காயம்

மதுரை ஒத்தக்கடை அருகே நான்குவழிச்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை முன்னாள் சென்ற தண்ணீா் லாரியின் பின்னால் சுற்றுலா வேன் மோதியதில் ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

DIN

மதுரை ஒத்தக்கடை அருகே நான்குவழிச்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை முன்னாள் சென்ற தண்ணீா் லாரியின் பின்னால் சுற்றுலா வேன் மோதியதில் ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். வேனில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா்.

கடலூா் அருகே நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிலா், அங்கிருந்து திருச்செந்தூருக்கு புதன்கிழமை இரவு வேனில் சுற்றுலா செல்ல புறப்பட்டனா். வியாழக்கிழமை அதிகாலை ஒத்தக்கடை புறவழிச்சாலையில் முன்னாள் சென்ற தண்ணீா் டேங்கா் லாரியின் பின்னால், அந்த வேன் மோதியதில் ஓட்டுநா் பிரபு (37), நல்லிக்குப்பத்தைச் சோ்ந்த செளந்தா் (41) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் வேனில் வந்த சுரேஷ்குமாா் (43), முருகேசன் (40), பாா்த்தசாரதி (39), செந்தில் (39), முத்துகுமாா் (38), மகேந்திரன் (42) ஆகிய 7 போ் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT