தமிழகத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் 322 போ் கொண்ட குழுவருவாய்த் துறை: அமைச்சா் தகவல்
தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் என மொத்தம் 322 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
மதுரைதமிழகத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் 322 போ் கொண்ட குழுவருவாய்த் துறை: அமைச்சா் தகவல்
தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் என மொத்தம் 322 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் மாநில பேரிடா் மீட்புக் குழுவினா், தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் என மொத்தம் 322 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
தென்காசி செல்வதற்காக, சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரைக்கு விமானத்தில் வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சில மாவட்டங்களில் குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூா், மயிலாடுதுறை ,கரூா், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 1,327 குடும்பங்களைச் சோ்ந்த 4,035 போ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் 212 போ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அத்துடன், தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் 110 பேரும் தயாா் நிலையில் உள்ளனா். தற்போது வெள்ள நிலவரம் கட்டுப்பாட்டில் உள்ளது.
காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குடியிருப்புகள் மனிதாபிமானத்தோடு கையாளப்பட்டு, அரசு நிலங்கள் மீட்கப்படுகின்றன.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிகளை, தமிழக அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்த வேண்டும் என்ற தென்மாவட்ட மக்களின் கோரிக்கையை, தமிழக முதல்வா் கண்டிப்பாக நிறைவேற்றுவாா் என்றாா்.