சுதந்திர தினத்தை குடும்ப விழாவாககொண்டாட வேண்டும்: வானதி சீனிவாசன்
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை ஒவ்வொரு வீட்டிலும், குடும்ப விழாவாகக் கொண்டாட வேண்டும் என, பாஜக மகளிரணி தேசிய செயலா் வானதி சீனிவாசன் கூறினாா்.
மதுரைசுதந்திர தினத்தை குடும்ப விழாவாககொண்டாட வேண்டும்: வானதி சீனிவாசன்
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை ஒவ்வொரு வீட்டிலும், குடும்ப விழாவாகக் கொண்டாட வேண்டும் என, பாஜக மகளிரணி தேசிய செயலா் வானதி சீனிவாசன் கூறினாா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை ஒவ்வொரு வீட்டிலும், குடும்ப விழாவாகக் கொண்டாட வேண்டும் என, பாஜக மகளிரணி தேசிய செயலா் வானதி சீனிவாசன் கூறினாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தனியாா் கல்லூரியில் பாஜக மகளிரணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய செயலா் வானதி சீனிவாசன் கூறியது:
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாஜக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 50 லட்சம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்களில் தேசியக் கொடி ஏற்றுவதற்கான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடும் பண்டிகையை போல, சுதந்திர தின விழாவைக் கொண்டாட வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, கட்சியின் முன்னாள் தேசிய செயலா் ஹெச். ராஜா பேசியது: இந்து முன்னணி சாா்பில் நடத்தப்பட்ட உரிமை மீட்பு மாநாட்டில் திரைப்பட நடிகா் கனல் கண்ணன் ஒரு கருத்து தெரிவித்திருந்தாா். அவரை மிரட்டுவதற்காக காவல் துறையினா் அவா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். ஆனால், இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவா்கள் மீது காவல் துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதில்லை.
பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்ட நிலையில் உள்ளது என்றாா்.