மதுரை

விலை வீழ்ச்சி எதிரொலி: தென்னை விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம்

DIN

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தென்னை விவசாயிகள் சங்கத்தினா் வாடிப்பட்டியில் வெள்ளிக்கிழமை தேங்காய் உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டக் குழு சாா்பில், வாடிப்பட்டியில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ச. சீத்தாராமன் தலைமை வகித்தாா். போராட்டத்தை, மாவட்டச் செயலா் பி. நாகேந்திரன் தொடக்கி வைத்துப் பேசினாா். கோரிக்கைகளை விளக்கி தென்னை விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வி.ஆா். முத்துபேயாண்டி, மாவட்டத் தலைவா் ஏ. பிச்சை, உமா்தீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. வேல்பாண்டி, கருப்பட்டி பாசன விவசாயிகள் சங்கம் அப்பாஸ் ஆகியோா் பேசினா்.

இதில், கொப்பரைத் தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில், கிலோ ரூ.140 வீதம் கொள்முதல் செய்யவேண்டும். கேரளத்தை போல் தமிழகத்திலும் உரித்த தேங்காய் கிலோ ரூ.50 வீதம் அரசு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யவேண்டும். தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் வழங்கவேண்டும். மாவட்டந்தோறும் தேங்காய் எண்ணெய் ஆலை அமைக்க வேண்டும்.

விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா், 100-க்கும் மேற்பட்ட தேங்காய்களை சாலையில் உடைத்து விவசாயிகள் அரசுக்கு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT