மருந்துக்கடையில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
மதுரை அருகே மருந்துக்கடையில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரைமருந்துக்கடையில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
மதுரை அருகே மருந்துக்கடையில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே மருந்துக்கடையில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள செம்பியனேந்தலைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி தனலட்சுமி(40).இவா் அப்பகுதியில் உள்ள மருந்துக்கடையில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தனலட்சுமி கடையில் இருந்துள்ளாா்.அப்போது கடைக்கு மருந்து வாங்குவது போல வந்த இருவா், தனலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனா்.