மதுரை

பாலிடெக்னிக் ஆசிரியா் நியமனம் இறுதித் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா் பணி நியமனம் உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வை, ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தியது. இதில் தமிழ் வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டின் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. ஆகவே, அரசு பாலிடெக்னிக் ஆசிரியா் பணிக்காக தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்து ஜூலை 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.

தமிழ் வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டின் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி, தோ்வானவா்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த விநாயகமூா்த்தி உள்ளிட்ட சிலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பாலிடெக்னிக் ஆசிரியா்கள் தொடா்பான எந்தவொரு புதிய பணி நியமனமும், இந்த வழக்கின் இறுதித் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT