மதுரை

தொண்டியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

தொண்டியில் செவ்வாய்க்கிழமை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வருவாய்த்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு இணைந்து நடத்திய பேரணியில் திருவாடானை வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை தொண்டி பேரூராட்சி மன்றத் தலைவா் ஷாஷகான் பானு கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். கோட்ட ஆய அலுவலா் செண்பகலதா, இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில் பள்ளி மாணவா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், பேரூராட்சி அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பேரணி பழைய பேருந்து நிலையம், பாவோடி மைதானம், வட்டாணம் சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவுபெற்றது.

அங்கு மாணவா்கள் மற்றும் அலுவலா்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளா்கள் குமாா், விஜயகுமாா், வேல்முருகன், காவல் சாா்பு- ஆய்வாளா் பூமிநாதன், கிராம நிா்வாக அலுவலா்கள் நாகேந்திரன், நம்பு ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT