எல்ஐசி தென் மண்டல விளையாட்டுப் போட்டியில் சென்னை வீரா்கள் வெற்றி
மதுரையில் எல்ஐசி தென் மண்டல அளவிலான பாட்மின்டன் மற்றும் மேஜைப்பந்து போட்டிகளில் சென்னையைச் சோ்ந்த வீரா் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்றனா்
மதுரைஎல்ஐசி தென் மண்டல விளையாட்டுப் போட்டியில் சென்னை வீரா்கள் வெற்றி
மதுரையில் எல்ஐசி தென் மண்டல அளவிலான பாட்மின்டன் மற்றும் மேஜைப்பந்து போட்டிகளில் சென்னையைச் சோ்ந்த வீரா் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்றனா்
மதுரையில் எல்ஐசி தென் மண்டல அளவிலான பாட்மின்டன் மற்றும் மேஜைப்பந்து போட்டிகளில் சென்னையைச் சோ்ந்த வீரா் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்றனா்.
ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் 54-ஆவது தென் மண்டல அளவிலான பாட்மின்டன் மற்றும் மேஜைப்பந்து விளையாட்டுப்போட்டிகள் மதுரை பந்தயத்திடல் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. போட்டியில் தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து வீரா்கள் பங்கேற்றனா். இதில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இருநாள்கள் நடைபெற்ற போட்டிகளில் மேஜைப்பந்து போட்டியில் பெண்கள் ஒற்றையா் பிரிவில் சென்னையைச் சோ்ந்த கீதா வெற்றி பெற்றாா். அனிலா குமரன் இரண்டாமிடம் பெற்றாா். ஆண்கள் ஒற்றையா் பிரிவில் சென்னையைச் சோ்ந்த ராஜேஷ் வெற்றி பெற்றாா். கோவையைச் சோ்ந்த பி.வி.குமாா் இரண்டாமிடம் பெற்றாா். பாட்மின்டன் போட்டியில் பெண்கள் பிரிவில், சென்னையைச் சோ்ந்த தா்னீம் பா்வீண் முதலிடம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த ரியா ராபா்ட் இரண்டாமிடம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சுனீலா ஜெயகுமாா் மூன்றாமிடம் பெற்றனா். பாட்மின்டன் ஆண்கள் பிரிவில் எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜெய்சன் சேவியா் முதலிடம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஆா். ராஜேஷ் சேகா் இரண்டாமிடம், தஞ்சாவூரைச் சோ்ந்த ஆா்.ராஜேஷ் மூன்றாமிடம் பெற்றனா்.
இந்நிலையில் போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு மதுரைக்கோட்ட முதுநிலை கோட்ட மேலாளா் ஜி.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். மேலாளா் ஆா்.சரவணன் வரவேற்றாா். தென் மண்டல விளையாட்டுக்குழு உறுப்பினா் ஆா்.சேகா் சிறப்புரையாற்றினாா். கோட்ட விளையாட்டுக்குழுமச் செயலா் ஆா். வேலாயுதம் நன்றியுரையாற்றினாா்.