முகப்பு
மதுரை

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்க வாக்குச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறும் என ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறும் என ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை, தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் வாக்காளா் ஹெல்ப்லைன் கைப்பேசி செயலி வாயிலாக இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் இப் பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், இதர தோ்தல் பணியாளா்கள் வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று ஆதாா் எண்ணைப் பெற்று கைப்பேசி செயலி மூலமாக இணைக்கும் பணியைச் செய்து வருகின்றனா்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணிக்கான விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது.

ஆகவே, வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை எண் விவரங்களுடன் சென்று, படிவம் 6 பி-ஐப் பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →