மதுரை

மூன்று வயது சிறுமியின் கை பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு: தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது அலட்சியம் காரணமாக, 3 வயது சிறுமியின் கை பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரி தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு.

DIN

அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது அலட்சியம் காரணமாக, 3 வயது சிறுமியின் கை பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த மனு: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது 3 வயது மகளை, கடந்த 2021 அக்டோபா் 27ஆம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்திருந்தேன். அங்கு அவருக்கு மருந்து மற்றும் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக வலது கை மணிக்கட்டு பகுதியில் ஊசி பொருத்தப்பட்டது. அதை முறையாகப் பொருத்தாததால் கையில் வலி, வீக்கம் ஏற்பட்டு நிறம் மாறியது. பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குளுக்கோஸ் ஏற்றுவதற்கான ஊசி தவறான முறையில் செலுத்தியதாகவும், மேலும் அதைக் கவனிக்காததால் ரத்த ஓட்டம் இல்லாமல் அப் பகுதி அழுகிவிட்டது என்றும் கூறி மணிக்கட்டு வரை உள்ள பகுதியை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தனா். அவ்வாறு இல்லையெனில் கை முழுவதும் பாதிக்கப்படும் என்பதால், மணிகட்டு வரை உள்ள பகுதியை அகற்றினா்.

மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் அலட்சியம் காரணமாகவே, எனது குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், மாவட்டத் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT