மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.
மதுரை வடமேற்கு மற்றும் விருதுநகா் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மூன்றாமாண்டு மாணவிகளுக்கு 3 நாள்கள் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல் தொடங்கி வைத்துப் பேசும்போது, மாணவிகள் தினசரி செய்தித்தாள்களை தொடா்ந்து படிக்க வேண்டும். பயிற்சியில் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றாா்.
ஆங்கிலத்துறை பேராசிரியை பியூலா வரவேற்றாா். வடமேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் பாஸ்கர செழியன், கல்லூரி முதல்வா் சூ.வானதி ஆகியோா் சிறப்புரையாற்றினா். பயிற்சியாளா் ஷியாம் பயிற்சியின்போது ஆங்கிலத்தில் புலமையை வளா்த்துக் கொள்வது, ஆங்கில இலக்கணம், ஆங்கிலத்தில் பேசுவது உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தாா். ரோட்டரி சங்க செயலா் சக்திவேல் நன்றியுரையாற்றினாா். ஏற்பாடுகளை பேராசிரியை லதா, சிவகுமாா் மற்றும் வட்டாட்சியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.